1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (09:07 IST)

குக் வித் கோமாளி சீசன் 5.. போட்டியாளர்கள் யார் யார்?

விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில் வெங்கடேஷ் பட் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் இந்த நிகழ்ச்சியில் இணைந்து உள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்து உள்ளது.

குவைத் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களாக டப்பிங் கலைஞர் தீபா வெங்கட், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணு விஜய், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா, மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ஆகியோர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கோமாளிகளாக ஏற்கனவே பங்கேற்ற புகழ், சுனிதா, குரேஷி, மோனிஷா ஆகியவர்களுடன் விஜய் டிவி ராமர், லீ; சுரேஷ். சோபா விளம்பர சிறுவன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.,


Edited by Siva