ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (17:27 IST)

'குக் வித் கோமாளி’ போட்டியாளர் கர்ப்பம்.. சின்னத்திரையுலகினர் வாழ்த்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ் செல்வி என்பவர் கர்ப்பமாகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பதும் அவருக்கும் பாலாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வினு என்பவரை ரித்திகா திருமணம் செய்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது அவர் கர்ப்பமாகியுள்ளார் . தான் கர்ப்பமான தகவலை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு சின்னத்திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ் செல்வி பாக்கியலட்சுமி உள்பட சில சீரியல்களில்  நடித்தார் என்பதும் அதேபோல் விஜய் டிவியில் நடந்த சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran