வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (08:45 IST)

கதற கதற காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது ஏன்? பிரபலத்தின் விளக்கம்

மேடையில் வைத்து காஜல் அகர்வலுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் என்பது குறித்து ஒளிப்பதிவாளர் சோட்டா விளக்கமளித்துள்ளார்.
பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள கவசம் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் விழா மேடையில் காஜல்  பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
 
இதனால் காஜல் அதிர்ச்சியானாலும், சிரித்துக்கொண்டே அப்படியே சென்று விட்டார். இந்த வீடியோ வைரலாகவே கடுப்பான காஜல் அகர்வால் ரசிகர்கள் #BanChotaNaidu என்ற ஹேஷ்டேகை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவருக்கு எதிரான தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள சோட்டா நாயுடு, மறைந்த நடிகை சௌந்தர்யாவிற்குப் பிறகு நான் மதிக்கும், நேசிக்கும் ஒரு நடிகை காஜல் அகர்வால் தான். அவர் ஒரு சிறந்த நடிகை, நல்ல மனிதர். அந்த பாசத்தில்தான் அவருக்கு முத்தம் கொடுத்தேன். எந்த ஒரு தப்பான நோக்கத்திலும் காஜலுக்கு முத்தம் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.