1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:02 IST)

மேடையில் பல பேர் முன்பு காஜலுக்கு முத்தம் கொடுத்த பிரபலம்

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தெலுங்கில் தற்போது டாப் நடிகையாக காஜல்  உள்ளார்.
பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள கவசம் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் விழா மேடையில் காஜல்  பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
 
இதனால் காஜல் அதிர்ச்சியானாலும், சிரித்துக்கொண்டே அப்படியே சென்று விட்டார். தற்போது  அந்த வீடியோ வைரலாகி வருகிறது.