புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (11:24 IST)

7 லட்சம் செலவு செய்து வழுக்கை தலையை ரெடி செய்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் பிரபலம் அனுப் ஜலோட்டா 7 லட்சம் செலவு செய்து தனது வழுக்கை தலைக்கு முடியை நட 7 லட்சம் செலவு செய்துள்ளார். 
 
சமீபத்தில் பிக்பாஸ் ஹிந்தி 12வது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள போட்டியாளர்கள் ஜோடிகளாகவே உள்ளனர். 28 வயதாகும் பாடகி ஜாஸ்லின் மதரு மற்றும் அவரது 65 வயது காதலர் அனுப் ஜலோட்டாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். ஆன்மீக பஜனை பாடல்கள் பாடி பிரபலமானவர் அனுப் ஜலோட்டா. இது பலரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. 
இந்நிலையில் அனுப் ஜலோட்டா தனக்கு வழுக்கை விழுந்ததால் அதற்காக தான் பெற்ற சிகிச்சை பற்றி சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். அதில் தலை முடி உதிர்ந்து சொட்டை விழுந்ததால் தாம் 7 லட்சம் செலவு செய்து 7000 செயற்கை முடியை நட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். குறைந்த செலவில் இதை செய்ய முடியும். இருந்தபோதிலும் இது முடி விஷயம் என்பதால் பணத்தை பார்க்காமல் காஸ்ட்லி சிகிச்சையை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.