சிவாஜி கல்வெட்டில் கருணாநிதி பெயர் அகற்றம் ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி


sivalingam| Last Updated: புதன், 8 நவம்பர் 2017 (15:31 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டு, அடையாறு பகுதியில் கட்டப்பட்ட 'சிவாஜி மணிமண்டபத்தில் சமீபத்தில் வைக்கப்பட்டது.


 
 
ஆனால் அந்த சிலையில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்த செயல் என்று திமுக வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :