Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவாஜி சிலை கல்வெட்டில் கருணாநிதி பெயர் அகற்றம்: வருத்தப்பட்ட பிரபு!

சிவாஜி சிலை கல்வெட்டில் கருணாநிதி பெயர் அகற்றம்: வருத்தப்பட்ட பிரபு!

Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (16:39 IST)

Widgets Magazine

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


 
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை சென்னை கடற்கரையில் 2006-ஆம் ஆண்டு கருணாநிதி திறந்து வைத்தார். அந்த சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது என கூறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடற்கரையில் இருந்து அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிட்டார்.
 
இதற்கு சிவாஜி குடும்பத்தினரும், அவரது ரசிகர்களும் வருத்தம் தெரிவித்தனர். அவரகளது தொடர் முயற்சியால் சென்னை அடையாறில் சிவாஜிக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த மணி மண்டபத்தில் கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை நிறுவினர்.
 
ஆனால் அந்த சிலையில் இருந்த கருணாநிதி பெயர் இருந்த கல்வெட்டை நீக்கிவிட்டு சிலையை மணி மண்டபத்தில் வைத்துள்ளனர். இதற்கு திமுக சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இன்று மணி மண்டப திறப்பு விழாவில் பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு, சிவாஜி கணேசனின் பெயரை கடற்கரையில் நிறுவியது முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆனால் அவரது பெயர் தற்போது இதில் இல்லாததை கூறி வருத்தப்பட்டார். ஆகையால் கருணாநிதியின் பெயரை இந்த மணி மண்டபத்தின் ஒரு ஓரத்திலாவது இடம்பெற செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எடப்பாடி மீது அதிருப்தியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தினகரனை கட்சிக்குள் இழுக்க திட்டம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிருப்தியில் ...

news

பங்கரவாதிகள் ஊடுருவல்: சுரங்க பாதையை தகர்த்த ராணுவம்!!

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு ...

news

கமலுடன் கை கோர்க்கலாமா; காங்கிரஸுக்கு டாட்டா சொல்லலாமா: குழப்பத்தில் குஷ்பு!

திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய நடிகை குஷ்பு அங்கு ஓரம் கட்டப்பட்டதால் ...

news

துபாயில் மினி செவ்வாய் கிரகம்...

துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ...

Widgets Magazine Widgets Magazine