தீபிகாவின் தலையை கொண்டுவந்தால் ரூ. 5 கோடி பரிசு: அறிவிப்பு செய்த உ.பி. அமைப்பு
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்தால் ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு தெரிவித்துள்ளது.
பத்மாவதி படம் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் ராணி பத்மினியை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளதால், பத்மாவதி ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. மகாசபாவின் இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங் கூறியதாவது, தீபிகாவை உயிருடன் எரிக்கும் நபருக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். படத்தில் ராணியை அவமதித்து வரலாற்றை திரித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக தீபிகாவின் தலையை வெட்டி எடுத்து வருபவருக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.