நடிகை தீபிகாவின் மூக்கை அறுத்து வீசுவோம்; கார்ணி சேனா தலைவர்

Padmavati
Abimukatheesh| Last Updated: வியாழன், 16 நவம்பர் 2017 (18:12 IST)
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நடிகை தீபிகவின் மூக்கை அறுத்து வீசுவோம் என கார்ணி சேனாவின் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

 

 
ராஜஸ்தான் சித்தூர் அரசி பத்மாவதியின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபிகா படுகோனே பத்மாவதியாக நடித்துள்ளார்.
 
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொலை மிரட்டலும் வந்தது. இதையடுத்து படத்தின் டீஸர் வெளியான பின்னர் எதிர்ப்பு வலுப்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என உத்தரபிரதேச அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற டீஸர் வெளியிட்டு விழாவின்போது ராஜ்புத் அமைப்பான கார்ணி சேனா அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு விழா பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கார்ணி சேனாவின் தலைவர் இதுகுறித்து ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். அதில்,
 
இந்த திரைப்படம் வெளிவரக்கூடாது. இது எங்கள் எச்சரிக்கை. பத்மாவதியை கேவலப்படுத்தும் விதமாக உள்ள இந்த படத்தில் நடித்த தீபிகாவை எச்சரிக்கிறோம். இந்த படம் வெளிவந்தால் நாங்கள் லட்சுமணனாக மாறி சூர்ப்பனகை தீபிகாவின் மூக்கை அறுத்து விடுவோம் என்று கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :