இதில் என்ன தப்பு இருக்கு... தீபிகாவுடன் பார்ட்டியில் இருந்த நடிகரின் தம்பி விளக்கம்

Deepika Padukone
Abimukatheesh| Last Updated: புதன், 15 நவம்பர் 2017 (12:40 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் நடிகர் ரன்பீர் கபூரின் தம்பி இருந்த புகைப்படம் வைரலானதை அடுத்து அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

 

 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்துவரும் பத்மாவதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை கொண்டாடும் விதமாக நடிகை தீபிகா பாலிவுட் வட்டாரங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.
 
இந்த பார்ட்டியில் தீபிகவின் முன்னாள் காதலர் ரன்பீர் கபூரின் தம்பிகள் ஆதார் ஜெயின் மற்றும் அர்மான் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர். பார்ட்டியில் ஆதார் ஜெயின் தீபிகாவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.
 
நெட்டிசன்கள் இந்த புகைப்படத்திற்கு தீபிகாவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து ஆதார் ஜெயின் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
பார்ட்டிக்கு சென்றால் புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். அதில் என்ன தவறு உள்ளது. மக்கள் ஏதாவது கருத்து தெரிவித்துக் கொண்டேதான் இருப்பார்கள். அந்த புகைப்படத்தில் எந்த தவறுமில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். வெகு நாட்கள் கழித்து தீபிகா பார்ட்டி கொடுத்தார். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :