ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:07 IST)

இந்த வாரம் இரண்டு எலிமினேஷனா? பிக்பாஸ் ரசிகர்கள் ஆச்சரியம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் அடிப்படையில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்தது 
 
அந்த வகையில் இந்த வாரம் யார் எலிமினேஷன் ஆவார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாளை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வீட்டில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் இந்தவாரம் இரண்டு எலிமினேஷனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சனிக்கிழமை ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் எலிமினேஷன் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது
 
இது உண்மை என்றால் இந்த வாரம் வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.