செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (15:39 IST)

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்: பிரேக்கிங் நியூஸ் போட்ட கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை பிரேக்கிங் நியூஸ் போட்டு கமல்ஹாசன் கூறுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
நேற்றைய நிகழ்ச்சியில் ராஜூ காப்பாற்றப்பட்டார் என்பதை பிரேக்கிங் நியூஸ் போட்டு தான் கமல்ஹாசன் அறிவித்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று கடைசியாக வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில் யார் வெளியேறுவது என்பதை பிரேக்கிங் நியூஸ் போட்டு கமல்ஹாசன் கூறும் புரமோ வீடியோ சற்று முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த மூவரில் வெளியேறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்பது குறிப்பிடத்தக்கது