புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2017 (15:57 IST)

ஜோடியாக மாறிய பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்-ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஓவியாவை அடுத்து ரைசாவுக்கு அதிக ரசிகர்களின் ஆதரவு இருந்தது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்குகளையும் டீசண்டாக விளையாடியவர்களில் ஒருவர் ஹரிஷ். இருவரும் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தபோதே நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் தற்போது இருவரும் திரையில் ஜோடியாகியுள்ளனர்.



 
 
ஆம், ஹரிஷ்-ரைசா நாயகன், நாயகியாக நடிக்கும் படம் ஒன்றை இளன் என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'கிரகணம்' என்ற திகில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காதல், காமெடி படமாக அமையவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.