Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியா விஷயத்தில் நான் இதை செய்திருக்கலாம்; ஆரவ் ஓபன் டாக்

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (11:56 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு காசோலை வழங்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும்  போட்டியாளர்களுக்காக மக்கள் 76,76,53,065 வாக்குகள் அளித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவிடம் நடந்து கொண்டது பற்றி மனம் திறந்துள்ளார் ஆரவ்.  ஓவியாவால்தான் அவர் பிக்பாஸ் டைட்டிலை வென்றார் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஓவியாவின் காதலை ஆரவ்  ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்படி நடக்கும் என்று நினைத்துதான் சென்றேன். ஆனால் அப்படி இல்லை. நாங்களே சமைத்து சாப்பிட்டு, நாங்கள் எடுத்து சென்ற உடைகளைதான் உடுத்தினோம். மேலும் சில நேரங்களில் மட்டுமே பிக்பாஸ் உடை தந்தார். பிக்பாஸ் வீட்டில் எங்கள் பொறுமையை சோதித்தார். டாஸ்க்குகள் மிகவும்  கடினமாக இருந்தன. பிக்பாஸ் வீட்டில் இருந்த பலர் வாக்குகளுக்காக போலியாக நடித்தனர். ஆனால் நானும் அப்படி  வாக்குகளுக்காக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.
 
மக்கள் தன்னை பார்த்து பரிதாபப்பட வேண்டும் என்று சுஜா வருணி நடித்தார். ஓவியா பிரபலமான நடிகை. அதனால் எனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை அவருக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிக்பாஸ் வீட்டில் அவர் செய்த சில விஷயங்களால் அவ்வப்போது நாமினேட் செய்யப்பட்டார்.
 
ஓவியா விஷயத்தில் நான் பொறுமையாக இருந்திருக்கலாம். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களில் நான்தான் அவரின் நல்ல நண்பர். அவரை அவமதித்திருக்க கூடாது. அவ்வாறு செய்தது தவறு என்றும் கூறியுள்ளார் ஆரவ்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சினேகன் தோல்வி குறித்து வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. அதில் முதல் பரிசை ஆரவ் தட்டி ...

news

டிவிட்டரில் பிக்பாஸ் கணேஷ் எதை பற்றி சொன்னார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் ...

news

இன்று முதல் மீண்டும் தியேட்டர்கள் ஸ்டிரைக்! ஸ்பைடர், கருப்பன் கதி என்ன?

திரையரங்குகளுக்கு தமிழக அரசு இரட்டை வரிவிதிப்பு செய்துள்ளதால் இதனை எதிர்த்து இன்று முதல் ...

news

'பக்கத்து வீட்டு கதவை தட்டிய நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா நடித்த 'தரமணி' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் சித்தார்த் ...

Widgets Magazine Widgets Magazine