1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (17:39 IST)

பிக்பாஸ் 100 நாள் முடிந்ததும் இதை செய்ய காத்திருக்கிறேன்; ட்வீட் செய்த ஓவியா

பிக்பாஸ் முதல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கிடையே கடுமையாக போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி முடிவடைதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளது.

 
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அவரும் வெளியேறிவிட்டார். பின்  ரசிகர்களிடையே சற்று தொய்வு வந்தது. இதனால் ஓவியா மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.  இதனை தொடர்ந்து நேற்று 85ஆவது நாள் எபிசோடில் நடிகர் வையாபுரி வெளியேற்றப்பட்டார். மேலும் கமல் சொன்னதை வைத்து இறுதியில் அனைத்து போட்டியாளர்களும் வரலாம் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
தற்போது ஓவியா, லைவ் சேட் வேண்டும் என நிறைய பேர் ட்வீட் செய்துள்ளதை பார்க்கிறேன். உங்களை போலவே நானும்  ஒன்றை செய்ய ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.. பிக்பாஸ் 100 வது நாள் முடிந்தததும் சேட் செய்யலாம் என  ட்விட்டரில் கூறியுள்ளார்.