1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (09:28 IST)

பிக்பாஸ் 7 பிரோமோ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட கமல்?

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 6சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் விரைவில் சீசன் 7 க்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் இதற்கான ப்ரமோஷன் வீடியோ ஷூட்டிங் நடந்ததாகவும், அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விரைவிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் 7 சீசனுக்காக கமல்ஹாசனுக்கு மொத்தம் 130 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.