1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 12 மே 2018 (18:42 IST)

ரகசியம் காக்கும் பாலா

தான் இயக்கிவரும் ‘வர்மா’ படத்தின் ஹீரோயின் யார் என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார் பாலா.
 
சந்தீப் வங்கா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழை பொழிந்தது.
 
இந்தப் படத்தை, தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் பாலா. விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன், இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால், அதைப்பற்றி எதுவுமே வாய் திறக்காமல் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் பாலா.