செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (18:03 IST)

அரசியலுக்கு வரும் ஆர்.ஜே.பாலாஜி? - வெளியான புகைப்படம்

நடிகரும், ரேடியே தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவது போன்ற சுவர் விளம்பர புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
2015ம் ஆண்டு டிசம்பவர் மாதம் சென்னையில் வரலாறு காணாத மழை பெய்த போது பல பகுதிகள் நீரில் மூழ்கின. பொதுமக்கள் வெளியே வர முடியமல் வீட்டிற்குள் முடங்கினர். மேலும், அடிப்படை தேவையான தண்ணீர், உணவு,மருந்து உள்ளிட்டவைகளை வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். அப்போது, பொதுமக்களும், சமூக நல இயக்கங்களும் ஒன்று கூடி சென்னை மக்களுக்கு உதவி செய்தனர். அதில், நடிகர் ஆர்.ஜே. பாலாஜியும் ஒருவர். இதனால், இளைஞர்கள் மத்தியில் அவரின் மதிப்பு உயர்ந்தது.
 
தற்போது அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கெனெ ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். 

 
இந்நிலையில், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு சுவர் விளம்பரம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், மே 18ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு, இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே. பாலாஜி அவர்களை வருக, வருக என வரவேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களை கொண்ட கொடியும் வடிவமைக்கப்பட்டு, கொடியின் நடுவில் பசுவின் படம் வரையப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரம் எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.