அமேசான் தளத்திலிருந்து “படையப்பா” நீக்கம்! – ரஜினி காரணமா?

rajni
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 1 மே 2020 (13:29 IST)
தமிழ் திரைப்படங்கள் பலவற்றை ஆன்லைனில் பார்க்க உதவும் அமேசான் ப்ரைம் வீடியோவிலிருந்து ‘படையப்பா’ திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய திரைப்படங்களை வெளியிடும் ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமானது அமேசான் ப்ரைம். இதில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2000ல் வெளியான “படையப்பா” திரைப்படமும் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த படத்தை அமேசானில் வெளியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் உரிய அனுமதி கோரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேசான் தளத்திலிருந்து ‘படையப்பா’ நீக்கப்பட்டுள்ளது. மேலும் படங்களை ஆன்லைன் தளங்களுக்கு வழங்க சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. திடீரென படையப்பா திரைப்படம் அமேசான் வீடியோவிலிருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :