இதோ கிளம்பிட்டாங்கள்ல..! ட்விட்டரில் வெடித்த தல – தளபதி மோதல்!

Ajith
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 1 மே 2020 (11:56 IST)
அஜித் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் அஜித் ரசிகர்களுக்கு எதிராக பதில் ட்ரெண்டிங்கில் இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடியாவிட்டாலும், ட்விட்டரில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர். 1.4 மில்லியனுக்கும் அதிகமாக பதிவான இந்த ஹேஷ்டேகுகள் உலக லவல் ட்ரெண்டிங்கில் உள்ளன. இதுதவிர #NanbarAjith என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தல ரசிகர்களுக்கு போட்டியாக ட்விட்டரில் களம் இறங்கிய தளபதி விஜய் ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டர் குறித்தும் விஜய் பற்றியுமான ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #Master #VijayTheFaceOfKollywood ஆகிய ஹேஷ்டேகுகள் மில்லியன் கணக்கில் பதிவிடப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றது. அதை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் அவர் குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்குவதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கம்போல இன்றும் தல தளபதி ரசிகர்களிடையே ட்விட்டர் ட்ரெண்டிங் மோதல் தொடர்கிறது.இதில் மேலும் படிக்கவும் :