அனிதா சம்பத்தை ஃபீல் பண்ண வைத்த சிறு வயது தோழியின் எமோஷ்னல் கடிதம்!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 1 மே 2020 (12:47 IST)

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர்.

அனிதா சம்பத் பிரபலமானத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மீடியாவில் செய்து வாசிப்பாளினி பொறுப்பில் இருப்பதால் கொரோனா ஊரடங்கிலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து அலுவலகம் சென்று வேலை பார்த்து வந்த அவர் தனது உடல் நலன் கருதி தொடர்ந்து 10 நாட்களுக்கு விடுப்பு எடுத்துள்ளார். எனவே தற்போது வீட்டில் இருப்பதால் எப்போதும் சோஷியல் மீடியாவில் குடிபுகுந்துள்ளார். அந்தவகையில் தற்போது சிறுவயதில் தனது நெருங்கிய தோழி எழுதிய கடிதத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 2007 ஆண்டு தோழி காயத்ரி எழுதிய அந்த லெட்டரில் "அனிதா பள்ளிக்கூடத்தை விட்டு செல்வதை எண்ணி வருத்தத்துடன் எழுதியிருக்கிறார். ஆனால் தற்போது அனிதா "நான் ஸ்கூல் மாறவில்லை தொடர்ந்து அவளோடுதான் படித்தேன் என்பதை குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :