புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (11:19 IST)

முன் ஜாமின் கோரி அமலா பால் மனு

சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகை அமலா பால் மனுதாக்கல் செய்துள்ளார்.
பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் மைனா, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்துகொண்டார். பின் கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அமலா பால் புதுச்சேரியில் வாகனப்பதிவு செய்து ரூ. 20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் அமலா பால் சார்பில் முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தான் புதுச்சேரியில் வசிக்கவில்லை என்று கூறுவது தவறென்றும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஏதுவாக புதுச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், அவ்வப்போது அங்கு சென்று தங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமலா பாலின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.