முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் மனு

Anbusezhiyan
Last Updated: புதன், 29 நவம்பர் 2017 (12:13 IST)
சசிகுமார் உறவினர் தற்கொலை விவகாரத்தில், முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார் அன்புச்செழியன்.
நடிகர், இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகனான அசோக் குமார், கம்பெனி புரொடக்‌ஷன் நிர்வாகியாகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர். கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்ட அசோக் குமார், அன்புச்செழியனிடம்  வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.
 
இதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சசிகுமார். அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு  செய்துள்ள போலீஸார், 3 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அன்புச்செழியன் சார்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :