சம்பளத்தை குறைத்த அஜித்? அதிர வைக்கும் காரணம்!!

ajith
Sugapriya Prakash| Last Modified சனி, 11 நவம்பர் 2017 (18:20 IST)
நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவருக்கு போட்டியாக சக நடிகர்கல் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

 
 
இந்நிலையில், அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விவேகம் திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படாலும் வணிக ரீதியாக நஷ்டத்தை சந்தித்தது. 
 
ஆனாலும், தனது அடுத்த படத்தையும் விவேகம் இயக்குனர் சிவாவிற்கே கொடுத்துள்ளார். இது சிவா - அஜித் கூட்டணியில் உருவாகும் நான்காம் படமாகும். 
 
மேலும், அஜித் தன்னால் பாதிக்கப்பட்ட சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்திற்கே தனது அடுத்த படத்தை தந்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அதோடு இந்த படத்துக்கு தனது வழக்கமான சம்பளத்தை வாங்காமல் குறைத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள். இந்த தகவல் உண்மையாகும் எனில் மற்ற நடிகர்களுக்கு மத்தியில் அஜித் முன்னுதாரமாக கருதப்படுவார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :