நடிகர் ரஜினிகாந்த் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்

rajini
Last Updated: ஞாயிறு, 14 ஜனவரி 2018 (12:17 IST)
தை 1ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் வைத்து, கரும்பு வெட்டி, புத்தாடை உடுத்தி தமிழர்கள் பொங்கலை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 

இவற்றுடன் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியும் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். தனது அரசியல் அறிவிப்பிற்கு பிறகு எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்த ரஜினி, இன்று முதல் முறையாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
tweet

டிவிட்டர் மூலம் கமல் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :