Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கழிவறையில் பெண்ணை வீடியோ எடுத்த இளைஞன்: சுற்றி வளைத்த பொதுமக்கள்!

Last Modified செவ்வாய், 9 ஜனவரி 2018 (18:38 IST)
மும்பையில் இளைஞன் ஒருவன் பொதுக்கழிவறையில் பெண்களை தனது செல்போன் கேமரா மூலம் மறைமுகமாக வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மும்பை சாந்தாகுருஸ் கிழக்க வகோலா பகுதியில் உள்ள பொதுக்கழிவறையில் ஆண்கள் கழிவறையையும், பெண்கள் கழிவறையையும் பிரிக்கும் சுவர் ஒன்று உள்ளது. ஆனால் அந்த சுவரில் சிறிய அளவில் ஒரு ஓட்டை உள்ளது. அந்த ஓட்டையை பயன்படுத்தியுள்ளார் வாலிபர் ஒருவர்.
 
தனது செல்போன் கேமராவை ஆன் செய்து பெண்களை வீடியோ எடுக்க அந்த ஓட்டையில் மறைத்து வைத்துள்ளார். இதனை கவனித்த பெண் ஒருவர் பதறிப்போய் சத்தம்போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்துள்ளார். இதனால் அந்த வாலிபன் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளான்.
 
ஆனால் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்த பகுதியில் இருந்த மக்கள் அங்கு திரண்டு அந்த வாலிபனை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 23 வயதான அந்த வாலிபன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :