ரஜினியின் அரசியல் வருகைக்கு இலங்கை முதல்வர் ஆதரவு

Last Updated: புதன், 10 ஜனவரி 2018 (04:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்ற எம்பியுமான நமல்ராஜபக்சே தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு ஜப்பான், இலங்கை உள்பட பல வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :