'மாரி 2' படத்தில் இணையும் கோலிவுட் ஹீரோ


sivalingam| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (22:35 IST)
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய மாரி' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ்  வில்லனாக நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்


 
 
இந்த நிலையில் தற்போது இன்னொரு கோலிவுட் ஹீரோவான கிருஷ்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் தனுஷ் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். கிருஷ்ணாவுக்கு இந்த படத்தில் முக்கிய ரோல் என்றும், அவருடைய திரையுலக வாழ்வில் இந்த படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
 
மேலும் 'மாரி 2' படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. தற்போது தெரிய வேண்டிய மிக முக்கிய தகவல் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பதுதான். முதல் பாகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனிருத், இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் தனுஷிடம்  வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை தனுஷ் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :