Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிக சம்பளம் கேட்டாரா காஜல் அகர்வால்?

சனி, 30 செப்டம்பர் 2017 (13:55 IST)

Widgets Magazine

காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்டதால்தான் தனுஷ் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில், காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்டதால் தான் அவரை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 10 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருக்கும் காஜல் அகர்வால், சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார். அத்துடன், தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். எனவே, தன்னுடைய சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்திவிட்டாராம் காஜல். அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்பதால் தான் காஜலை புக் செய்யவில்லை என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்: எதுக்கு!!

கமெடியனாக தனது பயணத்தை துவங்கிய சந்தானம் அடுத்து ஜோரோவாகி அதோடு தயாரிப்பாளராவும் ...

news

தீபாவளி ரிலீஸில் இருந்து விலகிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, தீபாவளி ரிலீஸில் இருந்து ...

news

விஷாலுடன் நடிக்கும் ‘ஜிமிக்கி கம்மல்’ சரத்

‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய சரத், விஷால் படத்தில் நடிக்கிறார்.

news

வெற்றியாளர் யார்? பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியா; 8.30-க்கு கிராண்ட் ஃபினாலே.....

பாலிவுட்டில் முதலி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து கோலிவுட் மற்றும் ...

Widgets Magazine Widgets Magazine