Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாதான் என் மருமகள்: ஆரவ் அம்மா

oviya aarav" width="600" />
sivalingam| Last Updated: சனி, 12 ஆகஸ்ட் 2017 (12:42 IST)
பிக்பாஸ் வீட்டில் காதல் பறவைகளாக ஆரவ்-ஓவியா சுற்றி வந்தபோது நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றது. ஆனால் திடீரென ஓவியா தனது காதலி இல்லை தோழி மட்டுமே என்று கூறியதால் நிகழ்ச்சி கொஞ்சம் டல்லடிக்க தொடங்கியது


 
 
அதுவரை சிரித்த முக ஓவியாவை பார்த்த வந்த ரசிகர்கள் பின்னர் அழுமூஞ்சி ஓவியாவை பார்த்தனர். இந்த நிலையில் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது உண்மை என்று ஆரவ் கமல் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார். ஓவியாவும் வெளியே வந்து தான் இன்னும் ஆரவ்வை காதலிப்பதாக கூறினார்.
 
இந்த நிலையில் ஆரவ் சம்மதித்தால் ஓவியாதான் என் மருமகள் என்று ஆரவ்வின் தாயார் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆரவ் வெளியே வந்தவுடன் இதுகுறித்து தான் கேட்கவுள்ளதாகவும் கூறியுள்ளாராம். ஏற்கனவே ஓவியா தன்னுடைய காதல் உண்மைக்காதல் என்றும், இது தோல்வியடையாது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :