காதலருடன் ஸ்ருதி ஹாஸன்; தற்போது வைரலாகும் புகைப்படம்!

Sasikala| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (11:19 IST)
நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதி ஹாஸனும் மைக்கேல் என்பவரை சமீபத்தில் காதலித்து வருவதாக செய்துகள் வந்தது.  இந்நிலையில் அவர் காதலர் தினத்தை இருவரும் சேர்ந்து கொண்டாடினர் என்ற செய்திகள் பரவியது. மைக்கேல் இங்கிலாந்தை சேர்ந்த நாடகக் குழுவில் நடிகராக உள்ளாராம்.

 
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது இந்தியா வந்துள்ள தன் காதலர் மைக்கேல் கார்செல் (Michael Corsale)வுடன் விடுமுறையை கழித்துவருவதாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது.

 
இந்நிலையில் நேற்று மைக்கேல் கார்செல் (Michael Corsale)வை வழியனுப்ப ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்துள்ளார். இருவரையும் அங்கிருந்த ரிப்போர்ட்டர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை சற்றும்பொருட்படுத்தாமல் இருவரும் சென்றுவிட்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :