சுவையான கோதுமை சுசியம் செய்ய!!
சுவையான கோதுமை சுசியம் செய்ய!!
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - அரைமூடி
ஏலக்காய் - 3
கோதுமை மாவு - 100 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பயத்தம் பருப்பு (தட்டைப்பயறு) இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். வெந்தவுடன் கரண்டியால் நன்கு மசிக்கவும். வெல்லத்தை சிறிது அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்
தேங்காயைத் துருவி, ஏலக்காயை பொடித்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும் .கோதுமை மாவை சற்று நீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு உப்பு, சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடானதும் பயத்தம் பருப்பு உருண்டைகளை கோதுமை மாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சிவந்தவுடன் எடுக்கவும். சுவையான கோதுமை சுசியம் தயார்.