1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான அரிசி பாயாசம் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 150 கிராம்
வெல்லம் - 200 கிராம்
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு

செய்முறை: 
 
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன்  பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
 
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை சேர்த்து பரிமாறவும். அருமையான சுவையில் அரிசி பாயாசம் தயார்.