1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (10:21 IST)

அசத்தலான சுவையில் அதிரசம் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் சுவையான அதிரசம் செய்யும் முறை!
 
தேவையானவை: 
 
பச்சரிசி - 500 கிராம் 
நல்லெண்ணெய் - 500 மி.லி 
ஏலக்காய் - சிறிதளவு 
உப்பு இல்லாத மண்டை வெள்ளம் - 400 கிராம் 
 
செய்முறை: 
 
பச்சரிசியை ஊற வைத்து மாவாக இடித்து பொடிகளை சல்லடையில் சலித்து வைக்கவும். பின்னர் வெல்லத்தை தட்டி தண்ணீரில் ஊற்றி சிறு தீயில் பாகு காய்ச்சவும்.( பாகு முறுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்) பிறகு பாகுடன் மாவை பிசைந்து வைத்து என்னை விட்டு அதிரசம் மாவை வைத்து கொள்ளவும்.
 
வாணலியில் என்னை விட்டு காயவைத்து இலையில் என்னை தடவிக்கொண்டு எலுமிச்சை பழம் அளவு மாவு எடுத்து தட்டி எண்ணையில் போடவும். மெதுவாக திருப்பி விட்டு சிவந்ததும் எடுத்து இரண்டு கரண்டியில் அழுத்தி எண்ணையை பிழிந்து எடுத்து வைக்கவும். 
 
டிப்ஸ்:

அதிரசம் பாகு மாவு மட்டும் தயார் செய்து வைத்துக்கொண்டால் தேவையான போதெல்லாம் சுவையான அதிரசம் செய்து சுவைக்கலாம்.