செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

இளநீர் பாயசம் செய்ய...

தேவையான பொருட்கள்:
 
இளநீர் - அரை லிட்டர் 
சேமியா - 150 கிராம் 
முந்திரி - 25 கிராம் 
பாதாம் - 25 கிராம் 
பிஸ்தா - 25 கிராம் 
வெள்ளரி விதை - 25 கிராம் 
பூசணி விதை - 25 கிராம் 
பனங்கற்கண்டு - 250 கிராம்
 
 
செய்முறை: 
 
இளநீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை,  பூசணி விதை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். 
 
சேமியா வெந்தவுடன் அதில் இந்த பொடியையும் சேர்க்கவும் அதே சமயத்தில் பனங்கற்கண்டுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க  விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனையும் கொதிக்கின்ற பாயசத்தில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து  இறக்கவும். இது பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் பால் பாயசத்தை விட பலமடங்கு சுவையானதாக இருக்கும்.