வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

பேரிச்சம் பழ கேக் செய்ய...

தேவையான பொருட்கள்:
 
பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
மைதா - 2 கப்
முட்டை - 3
சர்க்கரை - 1  1/2 கப்
ஆயில் - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன்

 
செய்முறை:
 
முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும்.
 
மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து  கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்க வேண்டும்.
 
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் பேக்கிங் பவுடர், வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பட்டைதூள் போட்டு மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
 
கலந்த கலவையை கேக் தட்டில் ஊற்றி ஓவனில் பேக் செய்யவும். ஓவனில் பேக் செய்யும் முன் முதலில் ஓவனை வெறுமனே சூடு செய்து, பிறகு கேக் தட்டில் மாவை ஊற்றி ஓவனில் வைத்த உடன் 160 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் என்ற அளவில்  வைத்துவிடவும். இந்த கேக் தயாராக குறைந்தது 35 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். ஓவனை பொறுத்து நேரம் மாறுபடலாம்.