1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

கேரட் அல்வா செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
துருவிய கேரட் - 4 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 1.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 12
உலர் திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
 
முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியை  அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள  வேண்டும்.
 
பின்பு பிரஷர் குக்கரை திறந்து, அதனை அப்படியே அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில்  கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி, அத்துடன் அந்த நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 
இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி, நன்கு கலந்து விடவேண்டும். கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்னரே, அதனை அடுப்பில்  இருந்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் அல்வா தயார்.