1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
  4. S3 is filmed with social responsibility - Hari Interview

எஸ் 3 சமூகப் பொறுப்புடன் படமாக்கப்பட்டுள்ளது - இயக்குனர் ஹரி பேட்டி

எஸ் 3 படம்
சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ் 3 இந்த மாதம் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி வந்த ஹரி  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். படம் குறித்து பல சுவாரஸிய தகவல்களை அவர் அப்போது பகிர்ந்து கொண்டார்.

 
எஸ் 3 படம் எப்போது ரிலீஸ்?
 
எஸ் 3 வருகிற 26 -ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
 
படம் பற்றி சொல்லுங்க...?
 
சிங்கம் படத்தின் 3 -வது பாகம் எஸ் 3 என்ற பெயரில் தயாராகியிருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழக, ஆந்திரா  போலீஸார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை இன்ஸ்பிரேசனாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.  ஞானவேல்ராஜா படத்தை தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
 
படத்தில் நடித்திருப்பவர்கள்...?
 
சிங்கம் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் எஸ் 3 யிலும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் தவிர ஸ்ருதி, சூரி, ரோபோ சங்கர்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
எங்கெங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது?
 
முழுக்க ஆந்திர மாநிலத்தை சுற்றி நடக்கக்கூடிய கதையை வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது. சில காட்சிகள் தூத்துக்குடி,  நெல்லை மாவட்டங்களில் எடுக்கப்பட்டு உள்ளன.
 
விமான நிலைய காட்சிகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறதே...?
 
இந்த படத்தில் 7 விமான நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. மேலும் 8 வகையான விமானங்களை இந்தப்  படத்தில் பயன்படுத்தி உள்ளோம்.
 
படம் எப்படி வந்துள்ளது?
 
இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின்  எதிர்பார்ப்பை எஸ்-3 கண்டிப்பாக பூர்த்தி செய்யும்.
 
அடுத்து...?
 
விக்ரமை வைத்து சாமி 2 படத்தை எடுக்கிறேன்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அரவிந்த்சாமி நடிக்கும் 3 படங்கள்