உலகக் கோப்பையில் பங்கேற்க நிதியுதவி கேட்ட வீராங்கனைக்கு உதவியுள்ளார் உ.பி முதல்வர்
ஜெர்மனியில் நடக்கவுள்ள உலகக் கோப்பை தூப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உ.பியை சேர்ந்த பிரியா சிங் என்ற வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கியுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஜெர்மனியில் வரும் 22ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உ.பியை சேர்ந்த பிரியா சிங் (19) என்ற வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவரால் பணம் செலவு செய்து ஜெர்மனிக்கு போக இயலவில்லை. ஏனென்றால் இவரது தந்தை ஒரு சாதாரண கூலித்தொழிலாளி.
இதனால் அவர் அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரியை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. ஜெர்மனியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதனால் போட்டியில் கலந்துகொள்ள நிதியுதவி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணின் நிலைமை குறித்து அறிந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருக்கு 4 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜெர்மனியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் அப்பெண்ணுக்கு அனைத்து பயண உதவிகளையும் செய்து தரவும் உத்தரவிட்டுள்ளார்.