வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (15:59 IST)

மகளில் ஐபிஎல்.. டாஸ் வென்ற மும்பை.. பேட்டிங் செய்து வரும் பெங்களூரு..!

மகளிர் ஐபிஎல் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி லீக் போட்டி நடைபெறுகிறது. பெங்களூர் மற்றும் மும்பை அணிவிக்கிடையே நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் என்ற மும்பை மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்று முன் வரை பெங்களூர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. ஏற்கனவே பெங்களூர் அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை மீண்டும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva