வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (23:31 IST)

மகளிர் ஐபிஎல் 2023 மும்பை அணியை எளிதில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ்

மகளிர் பிரீமியம் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய லீக் போட்டி மும்பை டிஒய் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியின் ச்ஆர்பபில், இஸ்சி வாங்கி 23 ரன்களும், கவுர் 19 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து,  110 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன்  பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் 9 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினர். ஷர்மா 33 ரன்களும், கேப்டன் மெக் 32 ரன்களும் அடிதிதனர். எனவே டெல்லி அணி விக்கெட் 9 விக்கெட்டிஉகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.