திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (16:24 IST)

ஒவ்வொரு பவுண்டரிக்கும் எனது காதலருக்கு ஒரு முத்தம் – வித்தியாசமான பேனரோடு நின்ற பெண்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பதாகை வைரலாகியுள்ளது.

இந்திய அணி நேற்று நடந்த டி 20 போட்டியை வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியைக் காண மைதானத்தின் கொள்ளளவில் 50 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் கையில் வித்தியாசமான ஒரு பதாகையோடு வந்திருந்த பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அவர் கையில் இருந்த பேனரில் ‘அடிக்கப்படும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் எனது துணைவருக்கு நான் ஒரு முத்தம் கொடுப்பேன்’ என எழுதி இருந்தார். இது கேமராவில் காட்டப்பட ரசிகர்கள் இடையே வைரலாக பரவியது. அந்த பெண் இப்படி எழுதிய நேரமோ என்னவோ தெரியவில்லை ஒட்டுமொத்தமாக அந்த போட்டியில் 28 பவுண்டரிகளும் 16 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.

இதே தொடரில் அதானிக்கு எதிராக இளைஞர் ஒருவர் பேனரோடு மைதானத்துக்குள் வந்தார் என்பதும், இளைஞர் ஒருவர் தனது காதலை பெண்ணிடம் வெளிப்படுத்தி அவரின் சம்மதத்தைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.