Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாண்டியாவால் நெருக்கடி வேண்டாம்: புது வீரர் கமெண்ட்...

Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (20:18 IST)
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தின் இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது 

இந்த போட்டின் ஆட்ட நாயகனான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச போட்டியில் அறிமுகமாகிய 2 வது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார் இவர். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, என்னை பொறுத்த வரையில் நாளுக்கு நாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது இலக்கு. 
 
என்னை ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடுவதால் நெருக்கடிதான் உண்டாகும். எனவே, நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமானது.
 
எனது பந்து வீச்சில் இரண்டு கேட்ச்கள் விடப்பட்டன. இது என்னை பெரிய அளவில் பாதிக்கவில்லை. முதல் விக்கெட்டை வீழ்த்தியதை மிகவும் விரும்புகிறேன் என கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :