1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (14:47 IST)

ஏர்செல் சேவை முடக்கம் ஏன்? உண்மை காரணம் இதோ...

நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ஏர்செல் நிறுவனம். அதுவும் தமிழகத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. தற்போது ஏர்செல் சேவை முடங்கியதற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே, ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்த ஏர்செல், வாடிக்கையாளர்களை தங்களது ஏர்செல் எண்ணை போர்ட் செய்துக்கொள்ளும்படியும் கூறியது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏர்செல் நிறுவனத்தின் சேவை தமிழகத்தில் முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் அவதிக்குள்ளாகினர். சேவை முடக்கத்திற்கான காரணம் தொழில்நுட்ப கோளாறு என ஏர்செல் தரப்பு தெரிவித்தது. 
 
ஆனால், அதன் உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஏர்செல் நிறுவனம் சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது. அது தற்போது தலைக்குமேல் சென்றுள்ளது. இதனால்தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட போதும் உடனடியாக சரிசெய்யப்பட இயலவில்லையாம்.
 
மேலும், ஏர்செல் நிறுவனத்தின் 5000 ஊழியர்கள் சேலையை இழக்கும் நிலையில் உள்ளனர். ஏர்செல் நிறுவனம் திவால் ஆகாது என கூறப்பட்டாலும் ஏர்செல் அந்த நிலையில்தான் உள்ளதாம்.