எங்களையும் கொஞ்சம் கவனியுங்க: அம்பயர்கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:36 IST)
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ), தற்போது ஐபிஎல் போட்டிகள் கூடுதல் லாபமாகவுள்ளது.

 
 
பலருடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக கிரிக்கெட் பிரகாசமாக்கியுள்ளது. இந்நிலையில், எங்களை கவனிக்க மாட்டீர்களா என்று முன்னாள் அம்பயர்கள் தற்போது கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.
 
டிவி அம்பயர், டிஆர்எஸ் என தொழிநுட்பங்கள் வந்தாலும் மைதானத்தில் அம்பயர்கள் மிக முக்கியமானவர்கள். அம்பயர்களுக்கு தற்போது மாதத்துக்கு, ரூ.22,500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
 
இந்த தொகையை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மொத்தமாக ஒரு ரொக்கம் வழங்குவது போல அம்பயர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :