திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:05 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன இயக்குநர் காயத்ரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராமும் ஒருவர். ஏற்கனவே போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் வெளியாகின. இதில் கலந்து கொணட பிரபலங்களுக்கு அவர்களின் பிரபலத்துக்கு ஏற்ப சம்பளம் தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 
தற்போது காயத்ரியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில்  எல்லோரையும் விட நடன இயக்குநர் காயத்ரிக்குதான் அதிகம் சம்பளம் என்று கூறப்படுகிறது.
 
பிக்பாஸ் வீட்டில் நாள் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு, மொத்தம் 56 நாட்களுக்கு ரூ. 28 லட்சம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கான சம்பளம்தான் எல்லோரையும் விட அதிகம் என்றும்  கூறப்படுகிறது.