1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (16:46 IST)

நயன்தாரா இடத்தை குறி வைக்கும் எமி: கதறும் கோலிவுட்!!

கோலிவுட் படங்களில் வரிசையாக ஒப்பந்தமாகி வருகிறார் நடிகை எமி ஜாக்ஸன். தற்போது இவர் விளம்பர நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 
 
எமி பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். அதேபோல் புதிய வியாபார பொருட்களுக்கு தூதுவராகவும் இருந்து வருகிறார். 
 
ஒரு விளம்பர போட்டோஷூட்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் எமி ஜாக்ஸன். இது மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிக்க மூன்று கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
 
சமீபத்தில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துயுள்ளார். இப்பொழுதே இப்படி என்றால் படம் வெளியான பின் சம்பளத்தை எவ்வளவு அதிகரிக்க போகிறாரோ என திகைக்கிறது கோலிவுட்.