வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (08:27 IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட்.. திண்டுக்கல் அணியை வீழ்த்திய சேலம்.. புள்ளி பட்டியலில் யார் முதலிடம்?

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் திண்டுக்கல் மற்றும் சேலம் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தன. விமல் குமார் 47 ரன்கள், கேப்டன் பாபா இந்திரஜித் 51 ரன்கள் எடுத்தனர்.

 இந்த நிலையில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேலம் அணியின் 18.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜேந்திரன் விவேக் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவடைந்த உடன் புள்ளி பட்டியலில் லைக்கா கோவை கிங்ஸ் அணி 4 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. மதுரை, சேலம், நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய அணிகள் தல ஒரு வெற்றியை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மதுரை மற்றும் திருச்சி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.

Edited by Siva