என் ஓய்வுக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது… நான் இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் – பும்ரா பதில்!
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று இந்தியா திரும்பிய போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு வீரர்களும் தங்கள் கருத்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது பேசிய பும்ராவிடம் நீங்களும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனது ஓய்வு தொலைதூரத்தில் உள்ளது. நான் இப்போதுதான் ஆடவே ஆரம்பித்துள்ளேன்.” எனப் பதிலளித்துள்ளார்.