பிங்க் ஜெர்சிக்கு மாறிய தென் ஆப்பரிக்கா; உடைத்தெரியுமா இந்தியா?
தென் ஆப்பரிக்க இன்று நடைபெறும் நான்காவது ஒருநாள் போட்டியில் பிங்க் கலர் ஜெர்சிக்கு மாறியுள்ளது.
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நான்வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தென் ஆப்பரிக்க அணி திடீரென இன்று பிங்க் கலர் ஜெர்சியில் களமிறங்கியுள்ளது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்காக தென் ஆப்பரிக்க அணி இன்று பிங்க் கலர் ஜெர்சி அணிந்து விளையாடுகிறது. தென் ஆப்பரிக்க பிங்க் கலர் ஜெர்சி அணிந்து விளையாடி போட்டிகளில் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.